முக்கியச் செய்திகள் தமிழகம்

சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது-உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்தார்.

நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் மட்டுமே சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக காவல் துறை டிஜிபிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக காவல் துறையின் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மனுதாரர்கள் 40 வயதை கடந்துவிட்டதாலும், மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டம் – ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வது உயரதிகாரிகளின் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டதாக வேதனை
தெரிவித்துள்ள நீதிபதி, நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் சட்டம் –
ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு
உத்தரவிடுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

Halley Karthik

சென்னையில் இன்று இரவு 10 மணிக்கு போக்குவரத்து மாற்றம் – எந்த இடங்கள்?

EZHILARASAN D

“திமுக அரசு நாடகமாடக்கூடாது“: டிடிவி தினகரன்

Halley Karthik