பூவிருந்தவல்லி அருகே. அடிப்படை வசதிகள் செய்து தராத அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து , பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் உள்ளது மேப்பூர் ஊராட்சி. இங்குள்ள மேப்பூர் தாங்கல் பகுதிக்கு மட்டும், எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிமுக ஊராட்சி மன்ற தலைவரான மேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனை கண்டித்து, அப்பகுதி மக்கள் மேப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் திட்டமிட்டு தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் கொண்டு வருவதில்லை. குடிநீர், சாலை மற்றும் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என குற்றம்சாட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
—-கு.பாலமுருகன்







