குன்றத்தூர் திருநாகேஸ்சுவர சுவாமி கோயிலில் 101-ம் ஆண்டு தேர் திருவிழா!

குன்றத்தூர், திருநாகேஸ்சுவர சுவாமி கோயில் 101 ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. குன்றத்தூர் தெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊர் ஆகும். இங்கு நவகிரக ராகு ஸ்தலங்களில் ஒன்றான, அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை…

குன்றத்தூர், திருநாகேஸ்சுவர சுவாமி கோயில் 101 ஆம் ஆண்டு தேர்
திருவிழா நடைபெற்றது.

குன்றத்தூர் தெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊர் ஆகும். இங்கு நவகிரக
ராகு ஸ்தலங்களில் ஒன்றான, அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை
நாகேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் பிரமோற்சவ விழா,
கடந்த மாதம் 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து,
சூரிய பிரபை மற்றும் தங்க முலாம் அதிகார நந்தி சேவை உள்ளிட்ட பல்வேறு
பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று மகா ரத உற்சவம்
நடைபெற்றது. மேலும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேர்
வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். மேலும், குன்றத்தூர் மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த
ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.