கிறிஸ்துமஸ் பண்டிகை | கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.  இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச.25) உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து…

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச.25) உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  கிறிஸ்துமஸ் பண்டிகை – இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது “சகிப்புத்தன்மை சகமனிதனை மதித்தல் தன்னுயிர் போலவே மண்ணுயிர் பேணுதல் என்பனவெல்லாம் நீதி மொழிகள் அல்ல; ஏசு பெருமான் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிகள் இந்த நெறிகளை மதம் சார்ந்தும் வாழலாம்; மதம் கடந்து மனம் சார்ந்தும் வாழலாம் தத்துவம் தந்த உத்தமர் பிறந்தநாள் வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல வாழ்வதற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Vairamuthu/status/1739124910088466873

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.