நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீர் மரணம்

புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீரென மரணமடைந்தார். பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த். பிரபுதேவா, ராஜூ சுந்தரம் நடனக்குழுவின் பணியாற்றி வந்த இவர், ’காதல் தேசம்’…

புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீரென மரணமடைந்தார்.

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த். பிரபுதேவா, ராஜூ சுந்தரம் நடனக்குழுவின் பணியாற்றி வந்த இவர், ’காதல் தேசம்’ படம் மூலம் நடன இயக்குநர் ஆனார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ’முஸ்தபா… முஸ்தபா’, ’கல்லூரிச் சாலை’பாடல்கள் அப்போது வரவேற்பைப் பெற்றன.

அதன்பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள கூல் ஜெயந்த், புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.

அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந் தார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.

இயக்குநர் பாரதிராஜா ட்விட்டர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாசத்துக்குரிய வனே, உன் மறைவு பேரதிர்ச்சிடா, மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.