ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 3,500 கன அடியாக உயர்ந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழையால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு 800 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், மழைப்பொழிவு காரணமாக நீர்வரத்து 3,500 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தொடர் விடுமுறையின் காரணமாக ஒகேனக்கல் அருவியை சுற்றிப் பார்க்க வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படு வருகிறது. இந்நிலையில், நீர்வரத்து அதிகரிப்பால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: மதுரை சித்திரை திருவிழா; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஒகேனக்கல் அருவியை நோக்கி படையெடுத்து வரும் சூழ்நிலையில் இந்த தடை மிகுந்த ஏமாற்றம் தருவதாக சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








