பிரதமர் மோடியை புகழும் சீன நெட்டிசன்கள்!…

சீன நெட்டிசன்கள் பிரதமர் மோடியை புகழ்வதாக அமெரிக்க பத்திரிகையாளர் எழுதியுள்ள ஆய்வு கட்டுரையில் தெரியவந்துள்ளது. இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அவ்வபோது பிரச்சனைகள் எழுந்து வருகிறது. முக்கியமாக கிழக்கு லடாக்கில் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பிரச்சனை…

சீன நெட்டிசன்கள் பிரதமர் மோடியை புகழ்வதாக அமெரிக்க பத்திரிகையாளர் எழுதியுள்ள ஆய்வு கட்டுரையில் தெரியவந்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அவ்வபோது பிரச்சனைகள் எழுந்து வருகிறது. முக்கியமாக கிழக்கு லடாக்கில் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பத்திரிகையில் சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது?’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக சமூகவலைதளங்களை ஆக்டிவாக பயன்படுத்தும் நெட்டிசன்களால் பிரதமர் நரேந்திர மோடி புகழப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இறந்து போன தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன் – நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

ட்விட்டரை போலவே சீனாவில், ‘சினா வெய்போ’ என்கிற சமூக வலைதளம் பிரபலம். இதனை சுமார் 58 கோடி பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் தான் மோடியை ‘மோடி லவோக்சியன்’ (மோடி-அழிவில்லாதவர் ) என்று  அழைக்கிறார்கள். முக்கியமாக மற்ற தலைவர்களை விட மோடி மிகவும் அற்புதமானவர் என்று சீன நெட்டிசன்கள் நினைப்பதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

”எனது 20 வருட பத்திரிகை அனுபவத்தில், எந்த வெளிநாட்டு தலைவரையும் சீனர்கள் பட்டப்பெயரிட்டு அழைப்பது அபூர்வமானது. மோடி அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்” என்று அந்தக் கட்டுரையை எழுதியுள்ள பத்திரிகையாளர் சுன்ஷான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.