காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்
என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட்
கூட்டத்தொடரில் முதலமைச்சரின் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்களின்
விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மீண்டும் திறக்கவும், இயக்கவும் சாத்தியக்கூறு இல்லை என்றும், அதில் வேறு தொழில்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்ற அவர், புதுச்சேரி அரசு கூட்டுறவு நூற்பாலையை தனியார் பங்களிப்புடன் ஆலையின் ஒரு பகுதியை நவீனப்படுத்துதல், நீண்டகால குத்தகைக்கு விடுதல் உள்ளிட்டவைகள் குறித்து நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிக்க: பாலா படத்தின் துணை நடிகை மீது தாக்குதல்
இவைகள் பரிசீலனையில் உள்ளது என தெரிவித்த அவர், அதே போல் மூடப்பட்டுள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் மாவட்ட மக்களுக்கு சுகாதார சேவையை முழுமையாக அளித்திட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையின் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது எனவும் மேலும் திருநள்ளாறு பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்படும் என பேரவையில் அறிவித்தார்.
தொடர்ந்து புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள அரசு பாப்ஸ்கோ மதுக் கடைகளை
திறக்கவும், அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என
உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, குறுக்கிட்ட எதிர்கட்சிதலைவர் சிவா ரெஸ்ட்ரோ பார்கள் அதிகமாக திறக்கப்படுகின்றதே என கேட்டதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. இன்னும் அதிகமாக ரெஸ்ட்ரோ பார்கள் திறக்கப்படும் என்றார்.
-ம.பவித்ரா








