முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

காற்றில் பறந்த சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம்

நடப்பு ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கான இறக்குமதி பெருமளவிற்கு அதிகரித்துள்ளது. எல்லை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் இந்திய- சீனா உறவில் விரிசல் இருந்தபோதிலும், இந்த புள்ளி விவரங்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

2021- 22 காலகட்டத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 45 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இறக்குமதி மதிப்பு 4.82 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அதன் மதிப்பு 7 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டடத்தில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 0. 61 சதவீதம் மட்டுமே உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2020 ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் பிறகு இந்திய-சீன எல்லையில் பதட்டம் அதிகரித்தது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பல சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. privacy policies என்று அதற்கு காரணம் கூறப்பட்டாலும் இது, சீன அரசுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டது.மேலும் Boycottchina என்ற ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து,சீன பொருட்களை புறக்கணிப்போம் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பாக சீனாவுடனான வர்த்தகம் சீரான நிலையில் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.

இரும்பு மற்றும் எஃகு பொருட்கள்,உரங்கள், எண்ணெய் விதைகள், கரிம இரசாயனங்கள், பட்டு சார்ந்த பொருட்கள் சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனாவிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், அவற்றிற்கான மூலப் பொருட்கள் பெரும்பாலும் சீனாவை சார்ந்திருக்கிறது. இதுவே இறக்குமதி உயர்விற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

சந்தோஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’நான் வந்ததும் கலகலப்பா உள்ளதா?’ – சிரிப்பலையை கிளப்பிய அமைச்சர்

Arivazhagan Chinnasamy

சீட்டிற்காக பாஜகவில் சேரவில்லை – குஷ்பு

Gayathri Venkatesan

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் தரப்புக்கு வலுசேர்த்த முக்கிய வாதங்கள் என்ன?

Web Editor