தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த சீனா!

சீனாவில் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும்…

சீனாவில் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்தியாவை போலவே கொரோனா தடுப்பூசி 2 தவணையாக போடப்படுகிறது.

முதலில் தடுப்பூசி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வின் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 50 கோடியாக இருந்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்திற்கு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.