ஆந்திராவில் ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி; மெகா கேம்ப்கள் நடத்தி ஆந்திர அரசு அசத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் இரவு 8 மணி வரையில் சுமார் 13 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது ஆந்திரா மாநில அரசு. இதன்மூலம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியை கடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்த அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், “தங்களது மாவட்டங்களில் இன்று 1 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி கிருஷ்ணா மற்றும் குண்டூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் அரசு ஒரு சாதனையை உருவாக்கியது