தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதிகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் அதிமுக முன்னாள் சி.வி.சண்முகத்தை சந்திதுள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் அலுவகலத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வாதன், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.
இபிஎஸ் அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என்று இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் சி.வி.சண்முகத்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







