பெரம்பூரில் மழை நீர் வடிகால் பணிகளை அய்வு செய்த முதல்வர் விஜய்!

பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் கால்வாயில் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையை அடுத்த் அம்பத்தூரில் அமைக்கப்பட்ட கேப்பிட்டலேண்ட் நிறுவனத்தின் தரவு மைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு  4 ஏக்கர் பரப்பளவில் 56 மெகாவாட் மின்சாரத்திறன் கொண்ட தரவு மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முதலவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் கால்வாயில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

பேசின் பாலத்தில் இருந்து ஆய்வு செய்து முதலமைச்சர் விஜய் வடிகால் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மழைக்காலத்தில் எவ்வித சிரமமும் அடையாத வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.