திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய்….!

முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி சென்றடைந்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் 2026 சட்டமன்ற தேர்த்லின் போது திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இதில் அவர் இருதொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தார்.

ஆனால் விதிகளின் படி ஒருவர் இரு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது. இதனால் திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் திருச்சி சென்றுள்ளார். தனி விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரயிறங்கிய முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதையும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும் புனித ஜோசப் கல்லூரிக்கு செல்கிறார்.

புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.