தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அவர் பேசுகையில், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் வெளி நடப்பு செய்தனர். இருப்பினும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக முதலமைச்சர் விஜய் தனது உரையின் போது முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியை குறிப்பிட்டு பேசினார். உரையின் போது முதலில் கருணாநிதி என்று குறிப்பட்ட முதலமைச்சர் விஜய் ”சாரி… சாரி…” எனக் கூறிவிட்டு கலைஞர் என்று கூறினார்.




