ஜப்பானின் ஆய்ச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் 18 பதக்கங்களை வென்றனர்.
பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று, வீரர், வீராங்கனைகளை வரவேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தடகளம், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் விரைவில் விருந்தளித்து கவுரவிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், விளையாட்டு மாணவர்களுக்கான விடுதிகளில் ஏசி வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் விளையாட்டு மாணவர்களுக்கான விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.




