சென்னை கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் நேற்று(28-07-2021)) மாலை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் நேற்று(28-07-2021)) மாலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அந்த தொகுதில் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்த அனிதா அச்சிவர் அகாடமியில் பயிற்சிபெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பல்லவன் சாலை இடுகாட்டின் எதிரிலுள்ள ஈமச்சடங்கு செய்யும் இடத்தை பார்வையிட்ட அவர், மறைந்த திமுக நிர்வாகி சேகர் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

இதனையடுத்து, திரு.வி.க நகர் மெயின் தெருவில் புதிதாக கட்டப்பட்ட 2 அங்கன்வாடிகளையும், கோபாலபுரம் உயர்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடியையும் திறந்துவைத்தார். பின்னர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் அருகே 153 ஏழை எளிய மாணவர்களுக்கான கணினி பயிற்சி சேர்க்கை, 98 பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி, கொரோனா தடுப்பூசி முகாமையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ராஜாஜிநகர் பகுதியில் அமையவுள்ள வண்ண மீன்கள் கடைகள், கணேஷ் நகரில் புதியதாக கட்டப்படும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதி மற்றும் அதன் அருகில் கட்டப்பட்டுவரும் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.