முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழ்ச்சி பிடிக்காது

சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசுவது  அவருக்கு பிடிக்காது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஓராண்டு கால அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.
வேலு கலந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு கால சாதனைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர், சட்டமன்றத்தில் முதலமைச்சரை புகழ்ந்து பேசுவது  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அம்மையார் ஜெயலலிதாவுக்கு புகழ்ச்சி மீது ஒரு ஆசை. சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினால் அவரை அறியாமலேயே சிரித்துக் கொண்டிருப்பார்.

தற்போது இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினால் உடனடியாக
முதல்வர் தலையிட்டு என்னை புகழ்ந்து பேசுவதை முதலில் நிறுத்துங்கள், உங்கள்
தொகுதி பற்றியும் மக்கள் பற்றியும் பேசுங்கள் என கூறும் முதலமைச்சர் ஸ்டாலின்.
புகழ்ச்சியே பிடிக்காதவர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எப்படி சென்னையில் அண்ணா மேம்பாலம் கட்டினாரோ, அதேபோல் திருச்சி, திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களில் மேம்பாலம் கட்ட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கருதுவதாக கூறினார். திமுக ஆட்சி பொறுப்பில் ஏறிய போது அப்போதைய அதிமுக அரசு நம்மிடம் ரூ.6.25 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றதாகவும்,  அந்த நிலையிலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த ஓராண்டில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 60 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இன்னும் நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை செய்வார். தேர்தல் அறிக்கையில், அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுக்கப்படும். இந்த ஓராண்டு கால ஆட்சியில் 72 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Advertisement:
SHARE

Related posts

அமைச்சரை சந்தித்த கல்லூரி முதல்வர்; மீண்டும் வழங்கப்பட்ட பணி

Ezhilarasan

பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டது குறித்து விளக்கிய அமைச்சர்

Niruban Chakkaaravarthi

கிராமப்புறங்களில் பள்ளிகள் திறப்பு: உயர்நீதிமன்றம் யோசனை

Ezhilarasan