முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரசில் இருந்து விலகினார் சுனில் ஜாகர்

பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சுனில் ஜாகர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலை வீடியோ மூலம் உரையாற்றிய சுனில் ஜாக்கர், தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, பஞ்சாபில் கட்சியை அழித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியை நல்ல மனிதர் என பாராட்டிய சுனில் ஜாக்கர், துதிபாடிகளிடம் இருந்து அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த சுனில் ஜாக்கர், கட்சிக்கு குட்பை என கூறி முடித்துக்கொண்டார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக இருந்தவர் சுனில் ஜாக்கர். 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அவர் பஞ்சாப் மாநில தலைவராக இருந்தார். நவ்ஜோத் சிங் சித்துவை, காங்கிரசின் மாநில தலைவராக நியமிப்பதற்காக, அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார்.

இதையடுத்து சுனில் ஜாக்கர் தெரிவித்த சில கருத்துக்கள் காரணமாக அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலையும் அதற்கு முன்பாக நடைபெற உள்ள பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுனில் ஜாக்கரின் விலகல் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி

Saravana Kumar

உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவி: கொலை செய்ய முயன்ற கணவர் கைது

Halley Karthik

சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு

Ezhilarasan