முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் காந்தியடிகள் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மலர்கள் தூவி மரியாதை செய்து ராட்டையில் நூல் நூற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், மதுரைக்கு என தனித்துவமான பாரம்பரியம், பண்பாடுகள் உள்ளது. மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி செய்தார். அரை ஆடை புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் கடந்துள்ளது. அரை ஆடை புரட்சி என்பது உலக புரட்சியாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது, ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சாக உள்ளது. எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு உள்ளதாக கூறவில்லை.

நாட்டிற்கு தேவையானவைகளை பேசாமல் ஆ.ராசா தேவையற்றவைகளை பேசி வருகிறார். ஆ.ராசாவின் பேச்சால் நாடு கொந்தளித்து உள்ளது. ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. ஆ.ராசாவின் கருத்து ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாக தான் பார்க்க வேண்டும். எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது.

முதலமைச்சர் ஆ.ராசாவை கண்டிக்க வேண்டும். முதல்வர் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள். தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித
நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹோலி கொண்டாட்டம்: சன்னி லியோனின் வைரல் புகைப்படங்கள்

Jeba Arul Robinson

காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

Gayathri Venkatesan

இயற்கை விவசாயத்தில் தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை – கே.அண்ணாமலை

Web Editor