முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

கிரிக்கெட்டில் புதிய விதிமுறை ; அக்டோபர் முதல் அமல்

அக்டோபர் 1ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரில் இருந்து இந்த விதிமுறைகள் அமலாகும். இந்திய முன்னாள் கேப்டன் (MCC)சவுரவ் கங்குலி தலைமையிலான கமிட்டி இந்த விதிமுறைகளை பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஐசிசி சர்வதேச கிரிக்கெட் இந்த உத்தரவை பிறப்பித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கிரிக்கெட் பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த நிரந்தர தடை

ஸ்வீங் செய்வதற்கு வசதியாக பந்து வீச்சாளர்கள் பந்து மீது உமிழ்நீர் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டது. இப்போது கொரோனா தாக்கம் குறைந்த போதிலும் கிரிக்கெட் பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நான்- ஸ்ட்ரைகரை ரன் அவுட் செய்தல்

பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பே க்ரீஸை விட்டு வெளியேறும்போது, பவுலர் மன்கட் ரன்-அவுட் செய்வது அதிகாரப்பூர்வமாக ரன் – அவுட் ஆக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற விதிமுறையை அறிவித்துள்ளது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் டைம் அவுட்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்வதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு தயாராக இருக்க வேண்டும், முன்னதாக 3 நிமிடமாக இருந்தது தற்போது இரண்டு நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.

போனஸ் 5 ரன்கள்

பவுலர் பந்துவீச ஓடிவரும் போது, பேட்ஸ்மேன் கவனத்தை திசை திருப்பும் வகையில் நகர்ந்தால் அந்த பந்து டெட் பாலாக அறிவிக்கப்படுவதோடு, பேட்ஸ்மேன் அணிக்கு போனஸ்-ஆக ஐந்து ரன்கள் வழங்கப்படும்.

பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, எதிர்முனையில் உள்ள வீரர் பேட்டிங் முனைக்கு ஓடி வந்துவிட்டால், அவரே அடுத்த பந்தை எதிர்கொள்வார். இனி அதற்கு தடை செய்யப்பட்டு புதிதாக களம் இறங்கும் வீரரே பந்தை எதிர்கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரைக்கரை ரன்-அவுட் செய்யும் “டெட் பால்”

முன்னதாக ஒரு பந்து வீச்சாளர் தனது பந்து வீச்சுக்குள் நுழைவதற்கு முன்பு பேட்டர் விக்கெட்டுக்கு கீழே முன்னேறுவதைக் கண்டால், ஸ்ட்ரைக்கரை ரன்-அவுட் செய்ய முயற்சிக்கலாம். இந்த நடைமுறை இனி ‘டெட் பால்’ என்று அழைக்கப்படுகிறது.

கிரிக்கெட்டில் பந்துவீச ஓர் அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் முன்னதாக அபராதம் மட்டும் விதிக்கப்படும், இதில் முற்றிலுமாக மாற்றம் செய்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால், தாமதிக்கும் நேரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆட்டத்தின் கடைசி பகுதியில், பீல்டிங் அணி, எல்லைக்கோடு அருகே நிறுத்தப்படும் ஒரு பீல்டரை உள் வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

மேற்கூறிய தகவல்கள் ஐசிசி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் போட்டி விறு விறுப்பாக மாறும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லை பெரியாறு: கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம்

EZHILARASAN D

சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்

G SaravanaKumar

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

Web Editor