முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் – முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வலியுறுத்தி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இருந்தால் தான் தன்னால் சுயமாக பணியாற்ற முடியும் இல்லையெனில் மன உளைச்சல் தான் ஏற்படுகின்றது என முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் பேசிய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் கடிதம் வழங்கி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்  என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்து கோரிக்கையில் உறுதியாக இருந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த கோரிக்கைக்கு முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து சமூக அமைப்புகளையும் ஒன்றினைத்து மாநில அந்தஸ்த்து கோரும் போராட்டக்குழு
அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இவ்விவகாரம் குறித்து பிரச்சாரம் செய்து
வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டக்குழுவினர் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கோரிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் கட்சி நிர்வாகிகளும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி தானும் தொடர்ந்து மத்திய அரசுக்கு
அழுத்தம் கொடுத்து வருவதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு
மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி அரசு சார்பில் தீர்மானம்
நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேடையிலேயே உயிரிழந்த மணப்பெண்; உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்

G SaravanaKumar

மீண்டும் களமிறங்கும் பப்ஜி:விளைவுகளைச் சொல்லும் செய்தி!

வேளாண் பட்ஜெட்: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை

Gayathri Venkatesan