தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளரும் உடன் இருந்தனர். இதையடுத்து இன்று காலை, 10.30 மணி அளவில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும் பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, மற்றும் புயல் பாதிப்புகளை சீர்செய்ய தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும், பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார்.