ஆசிரியர் தேர்வு தமிழகம்

நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

மத்திய அரசின் நிதி தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசுவதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை மெரினாவில் உலகத் தரமிக்க நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க, அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாட்கள் பயணமாக டெல்லிக்கு நாளை புறப்பட்டு செல்கிறார். பிரதமரை சந்திக்கும் போது, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட அவர் அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, மற்றும் புயல் பாதிப்புகளை சீர்செய்ய தேவையான நிதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும், பிரதமரிடம் முதலமைச்சர் வழங்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது

Halley Karthik

‘தாட்கோ அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை ’ – தாட்கோ தலைவர் மதிவாணன்

Arivazhagan Chinnasamy

கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!

Leave a Reply