அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக அல்ல, எதிர்கட்சியாக கூட வரமுடியாது என்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
தேமுதிகவில் இருந்து விலகிய வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன், தனது ஆதரவாளர்களுடன், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே மக்களை கவர வேண்டும் என்பதற்காக, ஆளுங்கட்சியினர் கோடிகளில் செலவழித்து பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கின்றனர் என்று விமர்சித்தார். மேலும், அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக மட்டுமல்ல எதிர்கட்சியாக கூட வர முடியாது என குறிப்பிட்ட ஸ்டாலின், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்றும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும், என்றும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்