பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்ளதாது ஏன் என்பதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தாய் குழந்தையை பெற்றடுப்பது போல நம் நாட்டின் விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்து தடுப்பூசியை கண்டுபிடித்து நம்மை காத்துள்ளதாக கூறினார். மேலும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கெண்டார். தடுப்பூசியை முக மலர்ச்சியோடு போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.
மக்களுக்கு தடுப்பூசி வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பிரதமர் மோடி, இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றும், அரசியல்வாதி ஒருவர் முன்கூட்டியே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் முன்களப்பணியாளர்களுக்கு போட வேண்டிய ஒரு தடுப்பூசி குறையும்; அதனால்தான் அவர்களுக்கு போடப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.







