முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய, சென்னை மெளலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் மழைநீர் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்ஒரு பகுதியாக போரூர் ஏரியில் உபரி நீர் வெளியேற்றும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு ஏரியின் வரைப்படத்தினை கொண்டு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து மவுலிவாக்கம், மற்றும் மாங்காடு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழை வெள்ள பாதிப்பு, வடிகால் அமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அய்யப்பன்தாங்கல் பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில் மழை பாதிப்பு – மக்கள் சொல்லும் தீர்வு” என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் களஆய்வு நடத்திய பகுதியில் ஒன்றான மெளலிவாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இடுப்பளவு தேங்கிய தண்ணீரில் பெண்கள் நடந்து வந்து முதலமைச்சரிடம், தங்கள் குறைகளை தெரிவித்தனர். விரைவில் அப்பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றப்படும் எனவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் அப்பகுதி மக்களுக்கு முதலமைச்சர் உறுதி கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு!

Ezhilarasan

டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Gayathri Venkatesan

’பீஸ்ட்..’ இதுதான் ’தளபதி 65’படத்தின் டைட்டில்!

Vandhana