முக்கியச் செய்திகள் தமிழகம்

நியாய விலைக் கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார், அப்போது, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்பு, அவர் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டதால் அலுவலக பணியில் இருந்த முத்தழகு என்ற தீயணைப்பு வீரரிடம் அலுவலகத்தில் குறைகள் ஏதும் உள்ளதாக என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

அண்மைச் செய்தி: ‘மின்வெட்டு; அவதூறு பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி’

தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், ஆண்டிபட்டி காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, அங்குள்ள வீடுகளுக்கு சென்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த கேட்டறிந்திருந்தார். இந்நிலையில் அவர் இன்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் பாரட்டப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

லண்டனில் இருந்து தேனி திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி!

Saravana

இடைத் தேர்தல் வியூகம் என்ன?: இபிஎஸ், ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

Lakshmanan

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலைகள்  ஊர்வலம் 

EZHILARASAN D