முக்கியச் செய்திகள் இந்தியா

3 மக்களவை, 29 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

இமாச்சல பிரதேசம், தாத்ரா – நாகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கும், 29 பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்த் குமார் சிங் சவுகான் மற்றும் தாத்ரா – நாகர் ஹவேலி தொகுதியின் மக்களவை உறுப்பினர் மோகன் தேல்கர் ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அதேபோல பல்வேறு காரணங்களால் காலியாக இருக்கும் பீகார், அசாம், மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவ.2ம் தேதி எண்ணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன.

Advertisement:
SHARE

Related posts

மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!

Gayathri Venkatesan

மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் “மகிழ்” நிறுவனம்

Vandhana

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Halley karthi