கொள்கை ரீதியாக வளர்ந்துள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்தையும் தகர்த்தெறியும் திறமை உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு 15 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது, பேசிய கே.எஸ்.அழகிரி, தாங்கள் நினைத்ததை விட முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் திறமைசாலியாக உள்ளதாக கூறினார்.
மேலும், அரசியல் ராஜதந்திரத்தில் சீனர்கள் மிக சிறந்தவர்கள் எனக்கூறிய அவர், சீனர்களை விட சேகர்பாபு சிறப்பானவர் என புகழ்ந்து பேசினார். மத்திய அரசு துணையாக இருக்கும் காரணத்தால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக ஆளுநர் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டிய அவர், கொள்கை ரீதியாக வளர்ந்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இவற்றை எல்லாம் தகர்த்தெரியக்கூடிய திறமை உள்ளது என புகழாரம் சூட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








