முதல்வர் முதல் கையெழுத்திட்ட பேனா: எங்கு கிடைக்கும்?

முதல்வர் மு.க .ஸ்டாலின் தான் முதல் கையெழுத்து போட பயன்படுத்திய பேனா எங்கு கிடைக்கும்என்பது பலரும் தேடி வருகிற ஒன்று, அந்த பேனாவின் சிறப்புகளை கடையின் உரிமையாளரே கூறுகிறார். கைபேசியும், கணிணியும் இன்று பலரின்…

முதல்வர் மு.க .ஸ்டாலின் தான் முதல் கையெழுத்து போட பயன்படுத்திய பேனா எங்கு கிடைக்கும்
என்பது பலரும் தேடி வருகிற ஒன்று, அந்த பேனாவின் சிறப்புகளை கடையின் உரிமையாளரே கூறுகிறார்.

கைபேசியும், கணிணியும் இன்று பலரின் எழுதும் வழக்கத்தையே மறக்கச் செய்திருக்கிறது. பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து பணிக்குச் சென்ற பலர் கையால் எழுதும் வழக்கத்தையே மறந்துவிட்டனர். கையால் எழுதி குறிப்பெடுக்கும் பழக்கம், பழங்கால வழக்கம் என்று கேலி செய்யும் அளவுக்கு நம் அன்றாட வாழ்க்கையில் பேனா பயன்படுத்தும் வழக்கத்தை இன்று கணினி மற்றும் கைபேசி மறக்கச் செய்திருக்கிறது.

ஆனால், இன்றும் பேனாவின் பிடியைத் தளர்தாமல் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் எழுத்தாளர்கள். எழுத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதுவதற்கு பயன்படுத்திய ஒரு வகை பேனா மீதான அவரது பிரியம் கடைசிவரை தொடர்ந்திருந்தது.

கருணாநிதி நீண்ட காலமாக விரும்பி பயன்படுத்திய “Wality” வகை பேனாவைதான் முதலமைசரான பின்னர் முதல் கையெழுத்திடுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தினார். பெரும்பாலானோரை திரும்பிப் பார்க்க வைத்த இந்த பேனா எங்கு கிடைக்கும் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. சென்னை, பாரிஸ் கார்னரில் உள்ள “ஜெம் அன் கோ” என்ற கடையில்தான் 50 ஆண்டுகளாக பேனாக்களை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி.

இது குறித்து கடை உரிமையாளர் கூறுகையில் “ஜெம் அன் கோ” பேனா கடையை 1920 ஆம் ஆண்டு தனது தாத்தா தொடங்கியதாகவும், பேனா உற்பத்தி தொழிலில் 3 தலைமுறைகளாக இருந்து வருவதாகவும் கூறினார்.
மேலும் மறைத்த தி மு க தலைவர் கருணாநிதி மட்டும் அல்ல ,மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஏராளமான தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத ஆளுமைகளாக இருந்தவர்கள் மற்றும் ஏராளமான எழுத்தாளர்கள் ,நீதிபதிகள் தங்களது கடையில் வாங்கும் பேனாவை பயன்படுத்துவது பெருமையாக இருப்பதாக கடையின் உரிமையாளர் பிரதாப் குமார் கூறுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய பேனாவின் நிப் தங்கத்தால் ஆனது என்ற தகவல் தவறானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிநுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் பேனாவிற்கான முக்கியத்துவம் குறையது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.