ராமதாஸ் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ராமதாஸ் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.

சேலத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை குறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும், ராமதாஸ் விரைந்து பூரண குணமாக வேண்டும் என்றும், குணமாகி வருவதை கண்டு மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார். தனது உடல் நலனில் அக்கறை கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.