எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

மகேந்திர சிங் தோனி பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்.எஸ்.தோனியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உங்கள் பெயரை எதிரொலிக்கும் ஒவ்வொரு ஆரவாரமான விசில் சத்தம் முதல், நீங்கள் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற இதயங்கள் வரை, உங்களது இந்த வரலாற்றுப் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வோடு பிரிக்க முடியாத ஓர் அங்கமாகக் கலந்துள்ளது!

நமது ‘கேப்டன் கூல்’ மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கிரிக்கெட் உலகில் நீங்கள் படைத்த அசாத்திய சாதனைகளும், அமைதியான தலைமைப் பண்பும், எளிமையான குணமும் தலைமுறைகளைக் கடந்து முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றன. நீங்கள் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், தொடர் வெற்றிகளையும் பெற்று, பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ உளமார வாழ்த்துகிறோம். உங்களுக்கான விசில் ஒலிகள் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.