தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக இன்று விஜயவாடா சென்றார். இதற்காக சென்னை நீலாங்கரையில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார்.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்தார். இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக கனகதுர்கா அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் அவரை சந்திக்க உள்ளார். அப்போது கோதாவரி – கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆலோலசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து விஜயவாடா உத்சவ் 2.0 கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை வர உள்ளார்.




