நாடு முழுவதும் யுபிஐ அல்லது டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவிகிதம் எம்டிஆா் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி, ரூ. 2000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 0.4 சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டது.
இந்தநிலையில், ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு அறிவிக்கப்பட்ட கட்டண வசூல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, ஆயுதப்பூஜை, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில், யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தால், பெருமளவில் இழப்பு ஏற்படும் என்று வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முடியும் வரை யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தப் போவதில்லை என்றும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




