விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான தயாரிபு பணிகளில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் பட்ஜெட் தாக்கல் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை அமைச்சர்வைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களாக துறைவாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் சந்தீப் நந்தூரி மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.