நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள தலைமை நீதிபதி அறிவுரை

மேலூர் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அனைத்து நீதிமன்ற…

மேலூர் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அனைத்து நீதிமன்ற வளாகங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களிலும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு செய்த தலைமை நீதிபதி, புங்கை மர கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள் மத்தியில் பேசிய அவர், வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

வழக்கறிஞர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் அவர்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.