27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கான உயரிய அங்கீ காரத்தை பிரதமர் மோடி வழங்கியிருப்பதாக, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அப்பாச்சி நகரில் சி.பி.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எந்தவித சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல், 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, பிரதமர் மோடி, பிற்படுத்தப் பட்டோருக்கான உயரிய அங்கீகாரத்தை அளித் துள்ளதாகவும், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொடுத்த தாகவும் தெரிவித்தார்.
மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித் துள்ள போராட்டம், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் எனவும் மத்திய அரசு ஒருபோதும் அரசியல் லாப நோக்கத்திற்காக ஒரு மாநிலத்தின் உரிமையை பறித்து இன்னொரு மாநிலத்திற்கு கொடுக்காது எனவும் கூறினார்.
தென்னக நதிகள் இணைக்கப்படும் போது தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் வகையில் மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படும் எனவும் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.







