செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் சி அணியை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வரும் 28ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் அதிலும் சிறப்பாக நமது தமிழ்நாட்டில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய சார்பில் பங்கேற்கம் மகளிர் அணி சி பிரிவினரை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி ஈஷா கரவடே, ஷாகிதி வர்ஷினி, பிராட்யுஷா போடா, பி.வி.நந்திதா மற்றும் விஷ்வா வாஷ்ணவாலா இதில் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே ஆண்கள் பிரிவில் 3 ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மகளிர் சி பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களமிறங் உள்ளன. இவர்களுக்கான பயிற்சி, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.








