சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க 8 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர மேயா், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பாஜகவின் கூட்டணிக் கட்சியினர் என 22 போ் காத்துள்ளனர்.
இந்நிலையில், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4.45 மணிக்குச் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வருகிறார் பிரதமர் மோடி வரவிருக்கிறார். 5.25 மணி வரை விமான நிலைய அறையில் ஓய்வு எடுக்கும் அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு செல்கிறார். ஐ.என்.எஸ் தளத்திலிருந்து சாலை வழியாகச் செல்லும் பிரதமர் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்குச் செல்லவிருக்கிறார்.
அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட்; முதலமைச்சருக்கு நடிகர் விஷால் வாழ்த்து!’
இதனால், மத்திய கைலாஷ், நந்தனம், தேனாம்பேட்டை மெட்ரோ, அண்ணா அறிவாலயம் எதிரில், அரசு கவின் கலைக் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரை வரவேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் பாஜகவினர் வருவதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவினர் இந்த பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆடி மாதம் என்பதால் அதனை மையமாகக் கொண்டு தமிழ்நாடு சிறு தெய்வங்கள் சிலை கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நடனமாட நாதஸ்வரம் இசைக்கப்பட உள்ளது. பிரதமரை வரவேற்கக் கோயில்களில் சாமி புறப்பாட்டிற்கு முன்பாக ஆடும் மல்லாரி நடனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அய்யனார், மதுரைவீரன், அம்மன், சிவன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









