விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த கீழான்மறைநாடு என்ற கிராமத்தில் முத்துமீனா என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்துள்ளது. அங்கு நேற்று நேரிட்ட வெடிவிபத்தில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். பவானீஸ்வரர் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தென்காசி மாவட்டம், வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இதே விபத்தில் பலத்த காயமடைந்த விளாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவானீஸ்வரனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
https://twitter.com/CMOTamilnadu/status/1552608467814600705?t=HcCTYyMciAYN74QvAM5uCQ&s=08
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும் மற்றும் பலத்த காயமடைந்த பவானீஸ்வரனுக்கு ரூ. 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா







