செஸ் ஒலிம்பியாட்-இந்தியா சார்பில் ‘சி’ அணி அறிவிப்பு

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்தியா சார்பில் C அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள 3வது இந்திய அணியில் இந்தியா சார்பில் தமிழக…

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்தியா சார்பில் C அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள 3வது இந்திய அணியில் இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் கார்த்திகேயன், சேதுராமன் உள்ளிட்ட 5 பேர் பங்கேற்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே A B என இரு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது C அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் தேஜஸ் பக்ரே C குழுவினருக்கு பயிற்சியாளர் மற்றும் தலைமை பங்கு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் மாஸ்டர்கள் சூர்யா கங்குலி, கார்த்திகேயன், எஸ் பி சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு உள்ளிட்ட 5 பேர் C அணியில் இடம்பெற்றுள்ளனர்.

C அணியினர் ஓபன் பிரிவில் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செஸ் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இன்று ஆய்வு செய்தார்.

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளில் இருந்து விமானங்களில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்குச் செல்கின்றனா்.

அதேபோல் போட்டிகள் முடிந்து தங்கள் நாடுகளுக்கு திரும்பும்போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்ல உள்ளனர். வீரர்கள் மட்டுமின்றி போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.