முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா :தோனி பங்கேற்கவில்லை!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

11 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து காட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் வெளிநாட்டு வீரர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், சர்வதேச சதுரங்க போட்டி இயக்குனர் பாரத் சிங் கலந்து கொள்கின்றனர். மேலும் கிரிக்கெட் வீரர் தோனியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என அழைப்பிதழில் இடம்  பெயர் இடம்பெற்றிருந்தது. தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்ததால், தோனியின் ரசிகர்கள் மட்டும் இன்றி செஸ் வீரர்களும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் அவர் விழாவில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய அரசு பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

Niruban Chakkaaravarthi

மேற்கு வங்கத்தில் இன்று 7ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

EZHILARASAN D

நியாய விலைக்கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

Gayathri Venkatesan