செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் தோனி பங்கேற்க உள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையைடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார்.
கடந்த 12 நாட்களாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் நிறைவு விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை முன்னிட்டு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளார். 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. தொடக்க விழா போலவே கண்கவர் நிகழ்ச்சியுடன் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவடை உள்ளது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறைவு விழாவில் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இந்த நிறைவு விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
சிறப்பு விருந்தினர்களாக விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், சர்வதேச சதுரங்க போட்டி இயக்குனர் பாரத் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.







