44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.
இதில் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
இதனிடையே, இந்திய மகளிர் ஏ அணியில் இடம்பெற்ற வீராங்கனைகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
“ஒரு விளையாட்டு வீரர்களாக இது ஒரு நல்ல நாள் அல்ல. சற்று ஏமாற்றம் நிறைந்த நாளாகவே முடிந்துள்ளது. வைஷாலி நல்ல வளர்ச்சி அடைந்து இருக்கிறார்” என்றார் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி.
இதனை ஏற்று கொள்வது கடினமாக இருக்கிறது. இன்று அமெரிக்கா அணி சிறப்பாக விளையாடினர். நாங்கள் எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம். ஆனால் எங்களால் அது இயலவில்லை என்றார் தானியா சச்தேவ்.
இன்று மிகவும் நல்ல செய்தி வரும் என நினைத்தேன். ஆனால் அது எங்களால் முடியவில்லை, இன்று தங்கம் வரும் என நினைத்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக வெண்கலம் கிடைத்துள்ளது என்றார் ஹரிகா.








