#ChennaiRain | கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளும் போது, பணிகளுக்கு இடையே, தூய்மைப்பணியாளர்களுடன் தேநீர்அருந்தி உரையாடினார். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த…

#ChennaiRains | Chief Minister M.K.Stal's first-hand inspection in the pouring rain - Tea Break with sanitation workers between jobs!

வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளும் போது, பணிகளுக்கு இடையே, தூய்மைப்பணியாளர்களுடன் தேநீர்அருந்தி உரையாடினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் எனவும், தொடர்ந்து வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 17) வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக். 14) நள்ளிரவு கனமழை பெய்தது.

இதனிடையே, மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, இன்று (அக். 15) காலை சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யானைகவுனி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை பகுதியான யானைக்கவுனி பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்ந்து பேசின் பிரிஜ் பகுதியிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணி, கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஆய்வு பணிகளுக்கு இடையே, தூய்மைப்பணியாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தி உரையாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.