சென்னை டூ கொல்கத்தா – புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சங்கல்ப் பியூடிஃபுல் வேல்ர்டு தொண்டு நிறுவனம் சார்பில் சென்னையில் இருந்து கொல்கத்தா வரையிலான சைக்கிள் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர்கள் வீதம் 1,746…

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சங்கல்ப் பியூடிஃபுல் வேல்ர்டு தொண்டு நிறுவனம் சார்பில் சென்னையில் இருந்து கொல்கத்தா வரையிலான சைக்கிள் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர்கள் வீதம் 1,746 கிலோமீட்டருக்கு சிவா ரவி என்பவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த பயணம் நெல்லூர், விஜயவாடா, கராக்பூர் வழியாக கொல்கத்தாவில் நிறைவடையவுள்ளது.

சங்கல்ப் பியூடிஃபுல் வேல்ர்டு தொண்டு நிறுவனத்தின் துணை தலைவரான விஸ்வநாதன் சென்னையில் இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் நோக்கிலும் இந்த மிதிவண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓட்டப் பந்தய வீரரான ஜெய் அஸ்வனி என்பவரும், சிவா ரவியுடன் இணைந்து பயணிக்கவுள்ளார். உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4ம் தேதி கொல்கத்தாவில் இந்த சைக்கிள் பயணம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.