முக்கியச் செய்திகள் இந்தியா

அசையா சொத்துகளை விற்க ஏர் இந்தியா முடிவு!

வருவாய் இழப்பு காரணமாக அசையா சொத்துக்களை விற்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக சிக்கன நடவடிக்கைகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துக்களை விற்க, ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஊழியர்களுக்கான குடியிருப்புகள், முன்பதிவு அலுவலகங்களை வாங்க விரும்புவோர் www.airindia.in இணையதளத்தில் ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவுள்ள ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு

Ezhilarasan

5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!

Gayathri Venkatesan

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் நியமனம்

Halley karthi