சென்னை தாம்பரம் – கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து!

தாம்பரம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் – சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில் சேவைகள் இன்று 10 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

தாம்பரம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் – சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில் சேவைகள் இன்று 10 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் இன்று (செப். 15) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் 10 மணி நேரம், புறநகர் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில்களும், தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில்களும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக காலை 8:35 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் ரயில் நிலையம் வரையில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும் என்றும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு எந்த புறநகர் ரயில்களும் இயக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.