முக்கியச் செய்திகள் தமிழகம்

“அடிபணிவது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது”- அமைச்சர் சேகர்பாபு

அடிபணிவது என்பது தற்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது  என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர் கோவில் மற்றும் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் கோவிலின் தெப்பக்குளத்தில் மதில் சுவர் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அதன் அடிப்படையில் கோவிலை ஆய்வு செய்ததோடு, அங்கு மதில் சுவர் எழுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் விருப்பம் உள்ள திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம் என இந்து அறநிலை துறை சார்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, விருப்பமுள்ள திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருவதாக கூறினார். அதேபோல், சட்டப்பேரவையில், தமிழில் அர்ச்சனை செய்தால் இதற்கு முன்னதாக இருந்த பங்கு தொகையை விட 60 சதவீதம் கூடுதலாக தரப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பான்மையான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அடிபணிவது என்பது தற்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது. அனைத்து மதத்திற்கும் சமமான ஆட்சி தான் நமது முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி. அதன் அடிப்படையில் தான் தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விஷயத்தில் ஆதீனங்களின் வேண்டுகோளை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் என்பது முக்கியமானது. அதனை தமிழக முதலமைச்சர் வரவேற்கிறார். மகளிருக்கான உரிமைத் தொகை கூடிய விரைவில் வழங்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சொல்வதை செய்தும், சொல்லாததையும் செய்வது தான் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த அனைத்து அறிக்கைகளும் செயல்படுத்தப்படும் என கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

Arivazhagan CM

தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது: தங்கம் தென்னரசு பெருமிதம்

Arivazhagan CM

’திமுகவிற்கு ஆதரவா?’..வாபஸ் பெற்ற வேட்பாளர்களை நீக்கிய அதிமுக

Saravana Kumar